à®…யோத்தி  à®°à®¾à®®à®°à¯ கோவிலுக்கு பிரதமர் மோடி கொண்டு வந்த பொருள் என்ன தெரியுமா ?

 à®…து ஏன் எடுத்து செல்லப்பட்டது அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

  à®¤à®¿à®±à®ªà¯à®ªà¯ விழாவில் பங்கேற்க முக்கிய அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.

குடமுழுக்கின் முக்கிய நிகழ்வாக கோயிலுக்குள் 51 அங்குலம் உயரம் கொண்ட பால ராமர் சிலை நிறுவப்பட்டது.

அதனை தொடர்ந்து ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமர் மோடி கையில் சிவப்பு துணியுடன் ஒரு வெள்ளி குடையை எடுத்து சென்றார்.

பொதுவாக தெய்வங்களை அலங்கரிக்கவும், மகிமைப்படுத்தவும் விழாக்களின்போது வெள்ளி குடைகள் பரிசளிக்கப்படும்.

பழங்காலத்தில் அரசர்களின் சிம்மாசனத்தின் மீது இம்மாதிரியான வெள்ளி குடைகள் வைக்கப்பட்டன.

மத நம்பிக்கைகளின் அடிப்படையில் வெள்ளி குடை சக்தியை குறிக்கிறது. பழங்காலத்தில் அரசர்களுக்கு பட்டம் வழங்கப்படும்போது இத்தகைய வெள்ளி குடைகள் வழங்கப்பட்டன.