அதிரடியாக சரிந்தது தங்கம் விலை..இன்றைய விலை நிலவரம்
ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் தற்போது ரூ.45 ஆயிரத்தை நெருங்குகிறது.
நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து 5,600 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.320 குறைந்து ரூ.44,800 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம்
கிராம் ஒன்றுக்கு ரூ.33 குறைந்து
4,587 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.264 வரை குறைந்து ரூ.36,696 ஆகவும்
விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.80.00 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000 எனவும் விற்பனையாகிறது.