எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படப்பிடிப்பு
தளத்தில் நடிகர்
தனுஷ் இருக்கும் படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.
இயக்குநர் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் M. குமரன் s/o மகாலட்சுமி.
இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், நதியா, விவேக், அசின் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர்.
இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
காதல், நகைச்சுவை, செண்டிமெண்ட், ஆக்ஷன் என அனைத்திலும் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது
இந்நிலையில் தற்போது எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி பட பூஜையில் தனுஷ் கலந்துக் கொண்ட படங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.