ITamilTv

CM Car : விபத்தில் சிக்கிய மம்தா-நலம் கேட்ட முதல்வர்

Spread the love

மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளானதை (CM Car) அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்துள்ளார்.

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு, கொல்கத்தா திரும்பிக் கொண்டிருந்த மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி காரின் அருகே மற்றொரு வாகனம் குறுக்கே வந்த போது, ஓட்டுநர் அவசரமாக பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது காரின் முன் இருக்கையில் அமரிந்திருந்த மம்தா, இதனை சற்றும் எதிர்பாராமல் நிலை தடுமாறி முன்பக்கக் கண்ணாடியில் மோதியுள்ளார் .

இதனால் தலையில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது . இதையடுத்து உடனே கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது என தகவல் வெளியானது.

மேற்கு வங்கத்தை ஆளும் பெண் புலியாக வலம் வந்த மம்தா பானர்ஜி கார் விபத்தில் சிக்கிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவர் பூரண நலம் பெற வேண்டி செய்தி அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இந்த விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாதது :

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி சென்ற கார் (CM Car) துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

காயமடைந்த அவர் விரைந்து நலம் பெற விழைகிறேன் என தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read : https://itamiltv.com/annamalai-criticism-the-tamil-nadu-government-about-jallikattu/

ஏற்கனவே பல முறை பல விபத்துக்களையும் அடிகளையும் சந்தித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மாதாவுக்கு இந்த விபத்து மிக சாதாரணம் என்றும் இதில் இருந்து அவர் விரைவில் மீண்டு வருவார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்வது போல் மேற்கு வங்காளம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பல முறை விபத்துகளை சந்தித்துள்ளார் .

உடம்பில் காயம் இருந்தாலும் மனதளவில் அவர் இரும்பு பெண்மணி என்பதை நிரூபிக்கும் வகையில் தான் எப்போதும் அவர் நடந்துகொண்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது


Spread the love
Exit mobile version