”இந்தியா மத சார்பற்ற நாடு” உதயநிதி பேச்சுக்கு மம்தா எதிர்ப்பு!!

யாரையும் புண்படுத்தாதீர்கள் இந்திய மத சார்பற்ற நாடு ஜனநாயக நாடு அதோடு சேர்த்து வேற்றுமையில் ஒற்றுமையும் நமது அடையாளம் என்று அமைச்சர் உதயநிதி பேசியதற்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும்.

அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்டவேண்டும் என்று தெரிவித்து இருந்தது பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அமைச்சர் உதயனியின் இந்த பேச்சுக்கு அமித்ஷா, ஜேபி நட்டா, அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் உதயநிதி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதி பேசியதற்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,தமிழ்நாடு மக்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதேசமயம் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.

ஆனால் அவர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் ஒவ்வொரு மதத்திற்கும் தனி தனி உணர்வுகள் இருக்கிறது.இந்தியா மத சார்பற்ற நாடு ஜனநாயக நாடு அதோடு சேர்த்து வேற்றுமையில் ஒற்றுமையும் நமது அடையாளம். நான் சனாதன தர்மத்தின் மதிக்கிறேன் நாம் கோவில் சர்ச், மசூதி, கோயில் எல்லாவற்றுக்கும் செல்கிறோம்.

இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. ஏராளமான மதங்களுக்கும், ஜாதிகளுக்கும் இந்தியாவில் இடம் இருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஜனநாயக நாடு. 

மேலும் எந்த ஒரு பிரிவினையும் புண்படுத்தும் எந்த ஒரு விஷயத்திலும் நாம் ஈடுபடக்கூடாது. யாரையும் புண்படுத்தும் வகையில் ஆன கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்த அவர்,இதனை கண்டனமாக தெரிவிப்பதை விட இதை நான் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளார்.

Total
0
Shares
Related Posts