”சனாதனம் வீழட்டும் – திராவிடம் வெல்லட்டும்..” சர்ச்சையில் சிக்கிய உதயநிதி!!

அமைச்சர் உதயநிதியின்(Udayanidhi) சனாதன பேச்சுக்கு பாஜவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதற்க்கு அமித்ஷா முதல் அண்ணாமலை வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்படி நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி (udhayanidhi) பேசியது என்ன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்(udhayanidhi) கலந்து கொண்டார்.

அப்போது, இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பேசிய அவர்,விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ் எந்த பங்களிப்பும் செய்யாத நிலையில், மிகப்பெரிய அளவில் இருந்த அந்தப் புத்தகத்தை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது.

அப்படி என்ன தான் பங்களிப்பு செய்தார்கள் என்று திறந்து பார்த்தோம். முதல் பக்கத்திலேயே ஆங்கிலேயர் காலணியை நாவால் வருடுகிற புகைப்படம் இடம் பெற்றிருந்தது குறித்து கேட்டதாக தெரிவித்தார்.

அடுத்து காந்தியார் கொலையை குறிக்கின்ற வகையிலான சித்திரம் வந்தது. அடுத்தடுத்த பக்கங்கள் அனைத்தும் காலியாக இருந்தன. ஏனென்று கேட்ட போது, நீங்களும் அந்த வரலாற்றை நிரப்பலாம் என்று கையில் பேனாவைத் தந்தார்கள். அதில் தான் மூன்று பெரிய பூஜ்ஜியங்களை வரைந்ததாக தெரிவித்தார்.

மேலும், இப்படிப்பட்ட பூஜ்ய வரலாற்றைக் கொண்ட சனாதனவாதிகளை மக்களிடம் அம்பலப்படுத்திய த.மு.எ.க.ச தோழர்களுக்கு வாழ்த்துகள். அமைச்சர் உதயநிதி டெங்கு ,கொரனோ ,மலேரியா இதை எல்லாம் நாம் எதிர்க்க கூடாது அதனை ஒழித்து கட்ட வேண்டும்.

அப்படி தான் இந்த சனாதனமும். சனாதனத்தை எதிர்க்க கூடாது அதனை ஒழுத்து கட்டவேண்டும் என்று பேசியிருந்தார்.தேர்தல் களத்தில் பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி சனாதனத்தை ஒழிப்போம் என்று தெரிவித்த அவர்,

ஈராயிரம் ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் வந்து கொண்டிருக்கும் சனாதனத்தை, திராவிட – கம்யூனிச சித்தாந்தங்கள் மூலம் வீழ்த்துவோம்; சமத்துவத்தையும் – சமூகநீதியையும் நிலைநாட்டுவோம் என உரையாற்றி இருந்தார்.

Total
0
Shares
Related Posts