பல மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது , உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது திமுகவில் உள்ள வாரிசு அரசியலை எடுத்துக்காட்டுவதாக தமிழக பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார் .
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:
அப்போதைய முதல்வர் கருணாநிதி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது மகனை துணை முதலமைச்சராக்கினார். தற்போது துணை முதலமைச்சருக்கான அவசியம் ஏன்?
Also Read : திருச்சி சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்..!!
மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும்போதும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது திமுகவில் உள்ள வாரிசு அரசியலை எடுத்துக்காட்டுகிறது.
முதலமைச்சரின் மகன் என்ற ஒரு காரணத்தை தவிர உதயநிதி ஸ்டாலினுக்கு வேறு எதுவும் தகுதி உள்ளதா?
தங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கே பதவி என்பதே தமிழக மக்களுக்கு திமுக சொல்லும் செய்தி என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.