ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் காட்டாமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தேர்வு குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறிருப்பதாவது :
சுப்மனை திடீரென Vice Captain-னு சொல்றாங்க.. எனக்கு இது நியாயமாவே தெரியல, சுப்மன் கில் கடைசி ஒரு வருஷத்துல ஒரு புடலங்காயும் பண்ணல, அப்பறம் ஏன் அவரை துணை கேப்டனா போடணும்? அவரை விட திறமையான வீரர்கள் இருக்காங்க, சாம்சன், சுதர்சன், இசான் கிசான், நிதிஷ் ரெட்டிக்குலாம் ஏன் வாய்ப்பு கொடுக்கல? இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு? பும்ரா துணை கேப்டனாக இல்லாததும் எனக்கு ஒன்னும் புரியல என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Also Read : கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு..!!
இவரை போலவே இந்திய அணியின் தேர்வு குறித்து ஏரளமான கிரிக்கெட் வீரர்கள் அவர்களது கருத்துக்களை தொடர்ந்த தெரிவித்து வரும் நிலையில் BCCI இடம் இருந்து இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி:
ரோஹித் (C), கில் (VC), விராட் கோலி, ஷ்ரேயஸ், கே.எல்.ராகுல், ஹர்திக், அக்ஸர், வாஷிங்டன், குல்தீப், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளனர்.