தமிழ்நாட்டில் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு உள் கர்நாடகா முதல் குமரிக்கடல் வரை பரவியுள்ள காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் தென் தமிழகம் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். அடுத்த சில நாட்களிலும் இதே போன்று குறிப்பிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏப்ரல் 30 மற்றும் மே 1, 2 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகிலுள்ள மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம்.
அதே சமயம், கடலோர பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிப்பதால் வெப்பத்தால் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

