ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார் .
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
Also Read : பாலியல் வன்கொடுமை – நிறுவனங்களுக்கு புதிய விதி..!!
அதன்படி, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கணிசமான எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம், நிச்சயம் நடைமுறைக்கு வரும் இதுகுறித்து ஆலோசனைகள் நடத்தி விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் .
அண்மையில் தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சர்வதேச டெண்டரை ரத்து செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டது குறிப்பிடதக்கது.