எப்போது யாருக்கு எங்கே நல்லது செய்ய முடியுமா அதை பிரதமர் மோடி செய்து வருகிறார் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 100 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது மேலும் 200 ஆக இருந்த மானியத் தொகை 300 ஆக உயர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டது .
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறிருப்பதாவது :
எப்போது யாருக்கு எங்கே நல்லது செய்ய முடியுமா அதை பிரதமர் மோடி தவறாமல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ஏற்கனவே 200 ரூபாய் கேஸ் சிலிண்டர்களுக்கு குறைத்த நிலையில் தற்போது மேலும் 100 ரூபாய் குறைத்து அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாமானியர்களின் உழைப்பு அதிலிருந்து வரும் ஒவ்வொரு ரூபாயின் மதிப்பை, அவர்களின் கஷ்டத்தை பிரதமர் அவர்கள் உணர்ந்து இதை செய்திருக்கிறார். சாமானியர்களுக்கு உதவிய பிரதமர் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.