“திமுகவின் கபட நாடகம் தான் இந்தி எதிர்ப்பு, சன் சைன் பள்ளியில் மூன்றாவது மொழி இந்தி இல்லை என்று அவர்களால் சொல்ல முடியுமா”
“இந்தித் திணிப்பு எனும் பெயரில் திமுக நடத்தும் கபட நாடகத்தை கண்டித்து பாஜக சார்பில் விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டம்”
“மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தி கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை முதலமைச்சரால் காட்ட முடியுமா..?
“இந்தி மொழியை எதிர்க்கவில்லை , திணிப்பைதான் எதிர்க்கிறோம் என உதயநிதி புதிய விளக்கம் தரக்காரணம் இந்தி நடிகைகளை தமிழகம் அழைத்து வரத்தான்”
“மின்சார கட்டண பில் வருவதால் மக்களை திசை திருப்பவே இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது”
“பருவ மழை வரும் போது அனைவரும் போட் வாங்கி வைத்து கொள்ளுங்கள் இந்த வருடம் மழையால் சென்னை தத்தளிக்க போகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்”
முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் பிறந்த நாளை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாயத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட ஏபிஜே அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,
தமிழக மக்களுக்கு எப்போதெல்லாம் கோவம் வருகிறதோ, அப்போதெல்லாம் திமுக கையில் எடுப்பது தான் இந்தி எதிர்ப்பு என்று கூறிய அண்ணாமலை திமுக செய்த சாதனை தமிழக அரசுப் பள்ளியில் கூட தமிழைக் கட்டாயமாக்க முடியவில்லை என்பது தான் என்று விமர்சனம் செய்தார்.
திமுகவினர் நடத்தும் பள்ளியில் கூட மூன்றாவது மொழியாக இந்தி உள்ளது என்றும் அவர்கள் நடத்தும் பள்ளியில் கூட தமிழை அவர்களால் கட்டாயம் ஆக்க முடியவில்லை என்று கூறிய அவர் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என்று அவர்களுக்கு தெரியாது என்றும் விமர்சனம் செய்தார்.
இல்லாத ஒரு விஷயத்திற்காக மக்களை திசை திருப்ப இந்தப் போராட்டம் நடந்ததாக குற்றம் சாட்டிய அண்ணாமலை இவர்கள் இன்று நடத்திய போராட்டம் படுதோல்வி என்றும் அரசியல் காரணத்திற்காக இவர்கள் இந்தி திணிப்பை எடுத்துள்ளார்கள் என்றும் திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இல்லையா என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பிய அண்ணாமலை,
பாஜக உங்களுக்கு பிடித்த மொழியை தான் படியுங்கள் சொல்வதாகவும், அமைதியாக உள்ள தமிழகத்தில் பிரிச்சனையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என்று விமர்சனம் செய்த அவர் திமுகவின் கபடி நாடகம் தான் இந்தி எதிர்ப்பு, சன் சயன் பள்ளியில் மூன்றாவது மொழி இந்தி இல்லை என்று அவர்களால் சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
அவர்கள் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது, காங்கிரஸ் இந்தி திணிப்பை பல இடங்களில் செய்து உள்ளது என்றும் இந்த கபட நாடகம் மக்கள் மன்றத்தில் தெரியும் என்று கூறிய அவர் பிரதமரே குஜராத்திதான்.
பிறந்து பல ஆண்டுக்கு பிறகு அரசியலுக்க்காதான் அவர் இந்தியை கற்றுக் கொண்டார் என்று கூறினார். தமிழகம் இந்தியை பயன்படுத்தும் மாநிலங்களுக்கான பட்டியலில் 3 ல் இருக்கிறது , எனவே இந்தியை கட்டாயமாக தமிழகத்தில் கொண்டுவர மாட்டோம். முதல் பட்டியலில் இந்தியை பயன்படுத்தும் மாநிலங்களும் , இரண்டாவது பட்டியலில் இந்தியை பாதியளவு பயன்படுத்தும் மாநிலங்களும் உள்ளன , மூன்றாவது பட்டியலில் இந்தியை பயன்படுத்தாத மாநிலங்கள் உள்ளன.
இந்தி திணிப்பு எனும் பெயரிலான திமுக போராட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்தி எதிர்ப்பு நாடகத்திற்கு எதிர்மறையாக திமுக நடந்து கொண்டுள்ளது.ஐஐஎம் , ஐஐடி யில் இந்தி கட்டாயமாக்கப்படும் என கூறிய மத்திய அரசின் அறிக்கை உண்மை என்றால் முதலமைச்சர் அதை காட்ட வேண்டும்.
பிரதமர் அலுவலகம் உட்பட எங்கு வேண்டுமானாலும் திமுக போராட்டம் , ஆனால் போராட்டத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று கூறிய அவர் உதயநிதி தமிழகத்தில் இந்தி படத்தை விற்க , இந்தி நடிகைகளை தமிழகம் கொண்டுவருவதற்காக , புதிதாக தற்போது இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் என கூறி வருகிறார்.
லால் சிங் சட்டா எனும் இந்திப் படம் தமிழகத்தில் திரையிடப்பட்டது , இது இந்தி திணிப்பு இல்லையா..? தமிழ்ப் படங்கள் அதனால் பாதிக்கப்படவில்லையா. உதயநிதிதான் அந்த படத்தை தமிழகத்தில் ஆயிரக்கணக்கான திரைகளில் வெளியிட்டார் என்றும் கூறினார்.
மேலும் பேசிய அவர் மக்களுக்கு எந்த மொழி தெரியுமோ அதை தான் பாஜக தலைவர்கள் தமிழகம் வரும் போது பேசுவதாகவும், மின்சார கட்டண பில் வருவதால் மக்களை திசை திருப்பவே இந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக கூறிய அண்ணாமலை இவர்களின் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரிக்க தான் போவதாகவும் கூறிய அவர் இந்த பருவ மழை வரும் போது அனைவரும் போட் வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்றும் இந்த வருடம் மழையால் சென்னை தத்தளிக்க போவதாகவும் விமர்சனம் செய்த அண்ணாமலை எத்தனை நாள் தான் அதிமுக மீது திமுக குற்றம் சொல்ல உள்ளதாகவும் கூறிய அவர் இந்த வருடம் நாங்கள் வேலை செய்யவில்லை ஜகா வாங்க தான் அவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் பரந்தூர் மக்களை கலந்து பேசாமல் விமான நிலையம் அமைக்கும் முடிவை திமுக அறிவித்ததால்தான் பிரச்சனை. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வேண்டும் என்பதுதான் பாஜக நிலைப்பாடு. திமுக பரந்தூர் விமான நிலைய , நிலம் தொடர்பான பிரச்சனையை சரியாக கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.