கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது அதிர்ச்சி அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது :
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் இதுவரை 56 பேர் உயிரிழந்தும், 200-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Also Read : கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட முதுநிலை நீட் தேர்வு – கண்டனம் தெரிவித்த அன்புமணி..!!
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே?… ராகுல் காந்தி எங்கே?; பிற்படுத்தப்பட்டோர் விஷ சாராயத்தால் இறக்கும் போது, ராகுல் காந்தியிடமிருந்து ஒரு அறிக்கை கூட வரவில்லை .
கள்ளக்குறிச்சி விவகாரத்தை தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதிக்காதது ஏன்? பல குடும்பங்களின் அழுகைக்கு காரணமான இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை .விஷ சாராயம் விற்றவர்களுடன் ஆளும் திமுகவுக்கு தொடர்பு இருப்பதால் முறையான விசாரணை நிச்சயம் நடக்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.