செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு : விசாரிக்க யாருக்கு அதிகாரம்? உயர்நீதிமன்றம் அதிரடி!!

அமைச்சர் செந்தில் பாலாஜி-யின் (senthil balaji) ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்பொழுது நீதிமன்ற காவலில் விசாரணைக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் நடைபெறும் நகர்வுகள் ஒவ்வொன்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அப்படியாக தற்போது அவரது ஜாமீன் மனு குறித்த நகர்வுகள் கவனிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்பதால், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகும்படி நீதிபதி ரவி அறிவுறுத்தினார்.

இதையடுத்து மீன் கோரி செந்தில் பாலாஜி சார்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும், முதன்மை அமர்வு நீதிமன்றமும் மறுத்துவிட்டன.

இந்நிலையில் அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா என்பதை உயர்நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வருமாறு செந்தில் பாலாஜி தரப்புக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்ட போது, தலைமை நீதிபதிதான் முடிவெடுக்க முடியும் என கூறிவிட்டனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து நீதிபதிகள் ஆர்.சுரேஷ் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு இன்று விசாரணை நடத்தவுள்ளது.

Total
0
Shares
Related Posts