itamiltv.com

“8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை!

அந்த 8 மாவட்டங்கள்..!

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 28-ஆம் தேதி வரை மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version