ITamilTv

ஸ்டாலின் அறிவித்த இந்த முரசொலி யார்..?

Who is this murasoli

Spread the love

Who is this murasoli : தற்போது திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள 21 பாராளுமன்ற வேட்பாளர்களில் 11 பேர் புதுமுகங்களுக்கு இம்முறை வாய்ப்பளித்து அனைத்து கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திமுக ஆனால்,

அவர்கள் அறிமுகப்படுத்திய வேட்பாளர்கள் பலரையும் பற்றி பொதுமக்கள் யாருக்குமே இவ்வலவு ஏன்? திமுக உடன்பிறப்புகளுக்கும் கூட தெரியாது என்பதோடு,

அறிமுகமில்லாத முகங்களுக்கு சொந்தகாரர்கள் இவர்கள் என்பதால், அவர்களைக் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்த வகையில் தஞ்சை வேட்பாளர் ச முரசொலியைப் பற்றி இப்போது பார்ப்போம் Who is this murasoli.

முரசொலி –கலைஞர் மு.கருணாநிதியால் துவங்கப்பட்ட முன்னேற்ற கழகத்தின் அதிகாரபூர்வ கட்சி பத்திரிகையின் பெயராக இருப்பதால், பாரம்பரிய திமுக காரர்தான் என்பதை அவர் பெயரே சொல்லி விடுகிறது.

Who is this murasoli

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த ச.முரசொலி.

வயது – 44 , வழக்கறிஞர்.

பட்டப்படிப்பை தஞ்சாவூர் சரபோஜி அரசு கல்லூரியிலும், சட்டப் படிப்பை பெங்களூர் ராம் மனோகர் லோகியா சட்ட பல்கலைக் கழகத்திலும் பயின்றனர்.

இவரது குடும்பம் பாரம்பரியமான திராவிட குடும்பம் எனக் கூறப்படுகிறது.

முரசொலியின் தாத்தா கந்தசாமி நாட்டார் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனராக இருந்தவர்.

முரசொலியின் தந்தை கே. சண்முகசுந்தரம் 1971 ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராகவும், தென்னங்குடி தொடக்க வேளாண்மை சங்க தலைவராக பதவி வகித்தவர்.

இது அவரின் குடும்பம் குறித்த அரசியல் விபரங்களாக இருந்தாலும், வேட்பாளர் முரசொலியும் அவர்களோடு அரசியலில் பயணித்தவர் தான்.

இதையும் படிங்க : மேடையில் தங்கை கனிமொழியை புகழ்ந்த முதல்வர்! நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யம்

கடந்த 2004 முதல் தென்னகுடி ஊராட்சி பிரதி நிதியாக இருந்திருக்கிறார் வேட்பாளர் ச. முரசொலி.

2006 முதல் 2011 ஆகிய 5 ஆண்டு காலம் தஞ்சாவூர் ஒன்றிய குழு உறுப்பினராக பொறுப்பில் இருந்த இவர், அதன் பிறகு, 2014 முதல் திமுக பொதுக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

2020 ஆம் ஆண்டு தஞ்சை வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுகவின் 15ஆவது அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்று தஞ்சை வடக்கு ஒன்றிய கழக செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் முரசொலி.

இளைஞர் , படித்தவர், வழக்கறிஞர் என்ற முறையிலும், பாரம்பரியமான திமுக குடும்பத்தை சார்ந்தவர் என்பதாலும்,

தொடர்ச்சியாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருபவர் போன்ற பல காரணங்களாலும் இந்த மக்களவை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப் பட்டிருக்கிறார் ச. முரசொலி.

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை நடந்த 6 மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று, மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக பணியாற்றிய,

தஞ்சாவூரின் சிட்டிங் எம்.பி. எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கே இம்முறை மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என அவரது ஆதரவாளர்கள் பலரும் எதிர்பார்த்த நிலையில்,

யாருமே எதிர்பாராத வகையில் முதன் முறையாக எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளரான ச.முரசொலி..!

இதையும் படிங்க : மேடையில் தங்கை கனிமொழியை புகழ்ந்த முதல்வர்! நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யம்


Spread the love
Exit mobile version