உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லப்போவது யார்..?இறுதிப்போட்டியில் இன்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதல்..

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது . இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக விளையாட உள்ளது .

இந்திய அணியின் நம்பிக்கை நாயகர்களாக இருந்து வந்த ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் காயத்தால் விலகியிருக்கும் நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிரடி காட்டிய சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா , ரஹானே ஆகியோர் அணியின் நம்பிக்கையாக உள்ளனர் .

இவர்களுக்கு பக்கபலமாய் இருக்க ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் . இதனால் இந்திய அணியின் பேட்டிங்கில் எந்த பிரச்னையும் இருக்காது என நம்பப்படுகிறது .

இந்த பக்கம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை பார்க்கும் போது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் அணியின் தூண்களாக உள்ளனர் .

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கெத்தாக வென்று காட்டவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர் .இந்த பயிற்சியின் போது கேப்டன் ரோஹித்துக்கு கட்டைவிரலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனால் இந்த போட்டியில் அவர் விளையாடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது .

இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் கடைசியாக மோதிய நான்கு, பார்டர் -கவாஸ்கர் தொடரில் இந்திய அணியே வெற்றி பெற்றது . 2017,19, 21, 23 ஆகிய 4 தொடர்களிலும் 2-1 என இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது .

இதுமட்டுமல்லாமல் நடப்பாண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதால் நிச்சயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்தாலோ,டை அல்லது போட்டி கைவிடப்பட்டாலோ இரு அணிகளுக்கும் இந்த கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Total
0
Shares
Related Posts