பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் தனுஷ் கோட்டியனை சேர்த்தது ஏன் என்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு நடைபெறும் பார்டர் கவாஸ்கர் போட்டியில் இந்திய அந்த விளையாட உள்ளது.
இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர சுழற்பந்து பந்துவீச்சாளராக வலம் அந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா மண்ணில் தனது ஓய்வை அறிவித்தார்.
திடீரென என அஸ்வின் ஓய்வு அறிவித்தது இணையத்தில் கடும் விவாதங்களுக்கு உள்ளன நிலையில் தற்போது பார்டர் கவாஸ்கர் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் தனுஷ் கோட்டியன் சேர்க்கப்பட்டதும் பெரும் பேசும் பொருளாக வலம் வருகிறது.
Also Read : சத்ய பிரியா கொலை வழக்கு – 70 சாட்சிகளுடன் வரும் 27ம் தேதி தீர்ப்பு..!!
இந்நிலையில் இந்த தொடரில் தனுஷ் கோட்டியனை சேர்த்தது ஏன் என்பது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ரோஹித் ஷர்மா கூறுகையில் :
குல்தீப்பிடம் விசா இல்லை, மேலும் அவர் இன்னும் 100% உடல்நலம் பெறவில்லை. அக்ஸருக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. அவரும் ஆஸி., வர தயாராக இல்லை. சீக்கிரம் ஒரு BACKUP வீரர் தேவைப்பட்டதால் தனுஷ் கோட்டியனை அணியில் சேர்த்தோம்.
தனுஷ் சிறந்த வீரர் இல்லை என நான் கூறவில்லை. அவருடைய திறனை தொடர்ச்சியாக உள்நாட்டு போட்டிகளில் காட்டி வருகிறார் என கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.