தங்கம் விலை தற்போது சவரனுக்கு 45 ஆயிரம் ரூபாயை நெருங்கி இருக்கும் நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் ₹50,000 வரை தங்கம் விலை உயரும் (gold price increased) என நகை வியாபாரிகள் கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து (gold price increased) வரும் நிலையில், மார்ச் 9ஆம் தேதி கிராம் 5150 என்று இருந்த தங்கத்தின் விலை தற்போது 5500 வரை உயர்ந்துள்ளது.
மேலும் இன்னும் ஒரு சில வாரங்களில் ₹6000 வரை தங்கம் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவால் ஆனது காரணமாக இருப்பதாகவும், இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதும், தங்கத்தின் மீதான வரிகள் உயர்ந்து உள்ளதும் காரணம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தங்கம் விலை உயர்ந்துவிட்டது என்றாலும் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்தால் இன்னும் ஒரு சில வாரங்களில் நல்ல வருமானம் கிடைக்கும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், 1 சவரன் ஆபரண தங்கம் விலை, 44,480 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்துள்ளது. மேலும், கிராம், 5,560 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாய் அதிகரித்து, 5,560 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக, 44 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும், வெள்ளி கிராமுக்கு, 1.30 ரூபாய் உயர்ந்து, 74.40 ரூபாய்க்கு விற்பனையானது.