முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றசாட்டுகளை பற்றி பேசாமல் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என்று ப்ரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
வட கர்நாடகாவின் 14 லோக்சபா தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் லோக்சபா தொகுதி பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளராக பிரஜ்வல் ரேவண்ணா அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில்,பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்,300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் கர்நாடக மாநிலம் முழுவதும் காட்டுத் தீயாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல்தொந்தரவு புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு முதல்2022-ம் ஆண்டு வரை தனக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொந்தரவு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வீடியோ, போலி என பிரஜ்வல் ரேவண்ணா கூறியுள்ள நிலையில் இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் ஆபாச வீடியோக்கள் வெளியான உடனே பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்குப் புறப்பட்டுப் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ,முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றசாட்டுகளை பற்றி பேசாமல் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என்று ப்ரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ப்ரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,300-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த பிரஜ்வல் ரேவண்ணா அவருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன் பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமரே பிரசாரம் மேற்கொண்டார் .மேடையில் அவரைப் பாராட்டினார்.
ஆனால் இன்று கர்நாடகாவைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டுத் தலைமறைவாக இருக்கிறார். பிரஜ்வல் ரேவண்ணா செய்த கொடூரமான குற்றங்களை கேட்டாலே நெஞ்சம் நடுங்குகிறது. மோடி ஜி இன்னும் அமைதியாக இருப்பீர்களா? என்று கட்டமாக பதிவிட்டுள்ளார்.