பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1000 ஏன் இல்லை என அனைவரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் – சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது :
பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ₹280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது
வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ₹37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ₹276 கோடி மட்டுமே கிடைத்தது.
SSA திட்டத்தில் ₹2100 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. இதனால், மாநில அரசியின் நிதியைக் கொண்டே அவை ஈடுகட்டப்படுகின்றன இதுபோன்ற சில தவிர்க்க முடியாத காரணங்களால்தான் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1000 வழங்க முடியவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரரசு தெரிவித்துள்ளார்.
Also Read : சென்னை பனையூரில் நாளை த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!!
இதையடுத்து அதிமுக ஆட்சியில் ரூ.2,500 தரப்பட்டது; தற்போது 1,000கூட இல்லை என அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விக்கு பதில் கொடுத்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது : தேர்தல் நேரம் என்பதால் அப்போது கொடுத்தீர்கள், எங்களுக்கு இப்போது தேர்தல் வரவில்லை, தேர்தல் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறிய பதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது