உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது அவசியமான தாகும். அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.
அந்த வகையில் அனைத்து தரப்பினருக்கும் இலகுவில் கிடைக்ககூடிய பழங்களில் ஒன்றான கொய்யாவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும். மேலும் தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கொய்யா மரத்தின் இருந்து கிடைக்கும் பழங்கள் மட்டும் அன்றி வேர், இலைகள், மற்றும் பட்டை, போன்றவையும் மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படுகின்றது. கொய்யாப் பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதோடு பசியையும் போக்குகின்றது.
மேலும் கொய்யாவில் சர்க்கரை குறைவாக உள்ளதால் சர்க்கரையைக் குறைக்கும் தன்மை உள்ளது. அதனால் கொய்யாக் காய்களை தொடர்ந்து உட்கொள்வதால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் வேர், இலைகள், மற்றும் பட்டை, போன்றவை குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு பெரிதும் குணமளிக்கின்றன.
கொய்யா இலைகள் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பதோடு அதன் குருத்துக்கள் தயாரிக்கப்பட்டும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.