உள்நாட்டு விமான சேவையில் Wi-Fi வழங்கும் இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ‘ஏர் இந்தியா’ உருவெடுத்துள்ளது
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் WI-FI சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சமீப காலமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது ஏராளமான புகார்கள் வந்த நிலையில் அந்த விமானங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது . இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது .
முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர் .
இந்நிலையில் விட்ட பெயரை மீண்டும் பிடிக்கவும் வாடிக்கையாளர்களை கவரவும் ஏர் இந்தியா நிறுவனம் டக்கர் வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
உள்நாட்டு விமான சேவையில் WI-FI வழங்கும் இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா உருவெடுத்துள்ளது. அதன்படி AIRBUS A350, BOEING 787-9 5 A AIRBUS A321NEO ரக விமானங்களில் WI-FI சேவையை ஏர் இந்தியா அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
‘ஏர் இந்தியா’ கையில் எடுத்துள்ள இந்த புதிய யுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து நிச்சயம் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.