சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா பங்கேற்பாரா இல்லையா என்ற கேள்வி அனைவரது மனதிலும் அரண் போல் எழும்பி உள்ள நிலையில் தற்போது இதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
உலககெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் ட்ராப்பி கிரிக்கெட் தொடர் விரைவில் நடைபெற உள்ளது . இதற்கான அணிகளின் பட்டியலும் அணியில் விளையாடப்போகும் வீரர்களின் பெயர்களும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
Also Read : அத மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ் – ரோஹித் ஷர்மாவுக்கு உருக்கமான கடிதம் எழுதிய சிறுவன்..!!
இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா முதுகு வலி காரணரமாக கடந்த சில நாட்களாகவே அவதிப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கருத்துக்கு பின்னரே, எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவு தெரியவரும் என தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
31வயதான பும்ரா சமீப காலமாக முதுகுவலியால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பும்ரா பங்கேற்காத பட்சத்தில் அணியில் இடம் பெறாத, ODI முன்னாள் NO.1 பந்துவீச்சாளர் சிராஜ்-க்கு அணியில் இடம் கிடைக்கலாம் என கூறப்படுகிறது.