முதல்வரான நீங்க இந்து பண்டிகைகளை வேறுபடுத்தி பார்க்கலாமா? -R.B.உதயகுமார் கேள்வி

திராவிட மாடல் பேசும் முதலமைச்சர் நீங்கள் இந்து பண்டிகைகளை,வேறுபடுத்தி பார்க்கலாமா?என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் (RB Udhayakumar)கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆர்.பி.உதயகுமார்(RB Udhayakumar) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட உரிமை என்று தெரிவித்த அவர் முதல்வராக இருக்கும் போது எல்லா ஜாதியினருக்கும், எல்லா மதத்தினருக்கும், எல்லா கட்சியினருக்கும் பொதுவானவர்.

ஆனால் இந்து பண்டிகையான ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் வாழ்த்து சொன்ன முதல்வர் மற்ற இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல முன்வராமல் இருப்பது ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் போன்று பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியவர் முதல்வர் மு க ஸ்டாலின் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜைகளுக்கு எல்லாம் வாழ்த்து சொல்ல முன்வருவாரா?என ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Total
0
Shares
Related Posts