நடிகர் வடிவேலு நடித்த மருதமலை படத்தில் வருவது போல பெண் ஒருவர் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மருத்துவர், அரசு ஊழியர் எனக்கூறி 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read : உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் பொது சிவில் சட்டம் அமல்..!!
கடந்த 2010, 2017, 2021ம் ஆண்டுகளில் தொடர்ந்து 3 திருமணங்களைச் செய்த நிஷாந்தி என்பவர், இந்தாண்டு ஜன. 20ம் தேதி சிவச்சந்திரன் என்பவருடன் 4வது திருமணம் செய்துள்ளார். இதனை சமூகவலைதளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண்ணின் 2வது கணவர் உடனே போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து நிஷாந்தியை பிடித்து விசாரணை நடைதிய போலீசார் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் . இதையடுத்து நிஷாந்தி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.