இங்கிலாந்தில் ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக கூறி பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்ற சம்பவம் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தில் Sports Shoes அணிந்து அலுவலகத்திற்கு வந்ததற்காக எலிசபெத் பென்னாசி என்ற இளம் பெண் ஊழியர் அவர் வேலை செய்த நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .
Also Read : முக்தி அடையப்போவதாக 4 பேர் தற்கொலை – திருவண்ணாமலையை அதிரவைத்த பகீர் சம்பவம் ..!!
பணி நீக்கத்திற்கு சொன்ன காரணத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த எலிசபெத் அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் . இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இளம் பணியாளர்களின் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவே இவ்வாறு செய்தது தொழிலாளர் தீர்ப்பாயம் நடத்திய விசாரணையில் உறுதியாகியுள்ளது.
ஆடை கட்டுப்பாட்டை மீறியதாக நிறுவனம் சப்பை காரணம் காட்டி பணிநீக்கம் செய்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சுமார் ₹32 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.