மேலும் 3000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் வகையில் புதிய திட்டம்! -தமிழக முதல்வர்

woman-self-help-group-loan-plan-will-be-initiated
woman self help group loan plan will be initiated

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன் சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 3000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு புதிய அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறது.அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டது.

woman-self-help-group-loan-plan-will-be-initiated
woman self help group loan plan will be initiated

இந்நிலையில், மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு உதவிடும் வகையில் ரூ.3,000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நாளை நடைபெறும் விழாவில் மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கி திட்டத்தை தொடங்க உள்ளார்.

Total
0
Shares
Related Posts