ராசிபுரத்தில் அண்ணாமலை நடைபயணத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!!

ராசிபுரம் அருகே அண்ணாமலை(Annamalai) நடைபயணத்தில் கலந்து கொண்ட பெண்ணிடம்பாஜவைச் சேர்ந்தவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில், நடைபயணம் நேற்று முன்தினம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்தது. பட்டணம் சாலையில் அண்ணாமலை நடந்து சென்ற போது, பாஜவினர் கூட்ட மாக நின்றிருந்தனர்.

அப்போது, பாஜவைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், அண்ணாமலையை பார்க்க ஆர்வத்துடன் கூட்டத்திற்குள் நுழைந்தார். அங்கு நின்றிருந்த
50 வயது மதிக்கத்தக்க கட்சிக்காரர் ஒருவர், அந்தபெண்ணிடம் விசாரித்தனர்.

அப்போது, பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஈடுபட்டார்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட முற்பட்ட போது அந்த நபர் தப்பியோடி விட்டதால், இந்த பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என பாஜவைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அப்பெண்ணும் போலீசில்புகார் தெரிவிக்காமல்,
அங்கிருந்து சென்று விட்டார். அண்ணாமலைநடைபயண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெண்ணிடம், அக்கட்சியைச்சேர்ந்தவரே சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால்அதிர்ச்சியடைந்த அந்தபெண், திரும்பி அந்தநபரை தாக்க முயன்றார்.உடனே அந்த நபர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.இதனால் அங்கு பரபரப்புஏற்பட்டது.

இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அழைத்து சென்றனர்

Total
0
Shares
Related Posts