இங்கிலாந்து நாட்டில் கார் பார்க்கிங் கட்டணத்தை தாமதமாக கட்டிய பெண்ணுக்கு அந்நாட்டு காவல்துறை 11 லட்சம் அபராதம் போட்டுள்ள சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் டார்லிங்டனில் உள்ள வாகன நிறுத்தத்தில் வழக்கமாக கட்டணம் செலுத்தியும் ₹11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஹன்னா ராபின்சன் என்ற பெண்மணி வேதனை தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் 5 நிமிட பார்க்கிங் விதியே இதற்கு காரணம் எனவும் ஹன்னா சாடியுள்ளார்.
இந்த விதியின் கீழ் பார்க்கிங் செய்த 5 நிமிடத்தில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. வாகன நிறுத்தத்தில் இணைய வசதி முறையாக கிடைக்காததால் ராபின்சன் ஒவ்வொரு முறையும் தாமதமாக கட்டணம் செலுத்தியுள்ளார்.
இதையடுத்து கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒவ்வொரு விதிமீறலுக்கும் சுமார் ₹18,000 வீதம் என ஹன்னா ராபின்சன்க்கு சுமார் ₹11 லட்சம் அபராதத்தை அந்நாட்டு காவல்துறை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.