ITamilTv

மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு..!!

Women's T20 World Cup

Spread the love

அனல் பறக்க நடைபெற இருக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

20 ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந்தேதி வரை வங்காளதேசத்தில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் அங்கு நடந்த அசாதாரண சூழல் காரணமாக இந்த தொடரை அங்கு நடத்த முடியாத நிலை உருவானது .

இதையடுத்து வங்காளதேசத்தில் நடைபெற இருந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Also Read : பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்..!!

அதன்படி UAE-ல் துபாய், ஷார்ஜா ஆகிய 2 இடங்களில் அக்.3 முதல் 20-ம் தேதி வரை மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெறும் என்றும், வங்கதேச கிரிக்கெட் வாரியமே தொடரை நடத்தும் என்றும் ஐசிசி அறிவித்திருந்தது .

இந்நிலையில் அனல் பறக்க நடைபெற இருக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற போகும் இந்த தொடரில் அடுத்த மாதம் 4ம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version