எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அரசியல் வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:
கட்சியை காட்டிக்கொடுத்தவர் மாபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன வரலாறு இருக்கு? நீ செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் ஒன்றும் கிறுக்கன், பைத்தியக்காரன் அல்ல, தொலைத்துவிடுவேன்.
என்னைப் பற்றி பேச வேண்டுமானால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறாய்? எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குழி பறிக்கும் வேலை நடைபெற்று வருகிறது என ராஜேந்திர பாலாஜி பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.