World War 3 : மூன்றாம் உலகப் போர் குறித்து இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார்.
பல தசாப்தங்களாக 3ஆம் உலகப் போர் பற்றி விவாதமாக இருந்து வருகிறது.
ஏற்கெனவே முதல் இரண்டு உலகப் போர்களின் தாக்கங்கள் உலக மக்களின் நினைவில் இருந்து இன்னும் அகலாத நிலையில், மற்றொரு பெரிய அளவிலான 3ஆம் உலக போர் குறித்த சிந்தனை திகிலூட்டும் நிலையில் உள்ளது.
இதனிடையே, தற்போது ரஷியா – உக்ரைன் இடையிலான போர் மற்றும் வட மேற்கில் இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈரான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் அமைதியின்மை போன்றவை மூன்றாம் உலகப்போர் குறித்த பீதியை கிளறிவிட்டிருக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் பாபா வங்கா, நாஸ்ட்ராடாமஸ் கணித்த கணிப்புகள் அப்படியே நடைபெற்று வருவதாக பரபரப்பாக பேசப்படும் நிலையில்,
இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
இதையும் படிங்க : சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.. கேரள அரசுக்கு முத்தரசன் கண்டனம்!
இதுதொடர்பாக அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது..
“2024-ல் உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளே இதை கணிக்க கூடியதாக உள்ளது. கொரியா நாடுகள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும்,
இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றன.மேலும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும்.
சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம்.
அதே நேரத்தில் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம். அதை தடுக்க ராணுவம் கொண்டு வரப்படலாம்.
இதனால் இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஜூன் 18-ந்தேதிக்கு பிறகு 3-வது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் உள்ளன.
அதற்கு முன்னதாக ஜூன் 10-ந்தேதியோ அல்லது 29-ந்தேதியோ கூட நிகழ வாய்ப்பு உள்ளது” என்று கூறி உள்ளார்.
மூன்றாம் உலகப்போர் (World War 3) குறித்து இந்திய ஜோதிடர் குசால் குமாரின் இந்த முன்னறிவிப்பு செய்தி, சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.