விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேற்று தொடங்கியது. 11-வது நாளுக்கான முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வரும் நிலையில், இன்று நிரூப் நந்தகுமார் அவரது கதையை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
இன்று வெளியான முதல் ப்ரொமோவில், “நான் உள்ள வரேன்னு தெரியும்போது நிறைய பேரு ஷேர் பண்ணிருந்தீங்க. யாஷிகாவோட எக்ஸ்-பாய்ஃப்ரெண்டு உள்ள வரான்னு. நான் பெருமையா சொல்றேன். யாஷிகாதான் நான் இங்க வரதுக்கு காரணம். இது சொல்றதுக்கு எந்த அசிங்கமும் கிடையாது.
நிறைய பேரு கேப்பாங்க, ஆனா, அவதான் எனக்கு ஒரு வாழ்க்கையை காட்டினா. மீடியா இண்டஸ்ட்ரில எந்த தொடர்பும் எனக்கு கிடையாது, அவதான் எனக்கு காட்டினா.
https://youtu.be/kJHW5T53Dgc
ஏன் ஒர் பெண்ணால ஒரு பையன் வளர கூடாதா? பசங்களால நிறைய பெண்கள் வளரும்போது, ஒரு பெண்ணால ஒரு பையன் வளரக் கூடாதா?” என நிரூப் பாஸ்ட்டீவாக பேசி முடிக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த மற்ற போட்டியாளர்கள் விசில் அடித்து, கைத்தட்டி கொண்டாடினர்.
வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் எபிசோட்கள் பிக் பாஸில் இந்த வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. கவலைகளும், கண்ணீருமாய் இருந்த மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து மாறுபட்டு பாஸிட்டீவாக பேசி இருக்கிறார் நிரூப். அதனால், இன்றைய எபிசோடில், பல சுவாரஸ்யங்கள் காத்திருப்பதாக தெரிகின்றது.