தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகமாக வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ( Yellow alert ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தவகையில் இன்று தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
Also Read : சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு..!!!
எனவே வெப்ப அலையில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு,உள்ளிட்டவற்றை பருக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் ( Yellow alert ) வலி ஏற்பட்டால் உடனே உரிய சிகிச்சை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.