Site icon ITamilTv

Yorker King நடராஜன்.. தங்க சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

Yorker King

Spread the love

Yorker King : தமிழக வீரர் நடராஜன் (யார்க்கர் கிங்) ஐபிஎல் 2024 – ல் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஐதராபாத் அணி சார்பாக 80 சவரன் தங்க செயின் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 35வது போட்டி ஏப்ரல் 20 அன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து, 267 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதையும் படிங்க : பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற, தரம் தாழ்ந்த பேச்சுக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது – முத்தரசன்!

பின்னர் ஹைதராபாத் அணியின் பௌலர்ஸ்களை சமாளிக்க முடியாமல் திணறிய டெல்லி அணி  67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

ஹைதரபாத் அணி சார்பில் நடராஜன் 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் பிட்ச்சில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 4.8 எகானமில் 4 விக்கெட்களைக் கைப்பற்றி 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

குறிப்பாக, 19வது ஒவரில் நடராஜன் அக்சர் படேல், குல்தீப் யாதவ், நோர்ட்ஜெ ஆகிய 3 வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதைப் பெற்றாலும், தனது யாக்கர்களால் 4 விக்கெட்களை வீழ்த்தி, அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் யாக்கர் கிங்.

இதனைக் கவுரவிக்கும் விதமாக நடராஜனுக்கு (Yorker King) அணி சார்பாக 80 பவுன் தங்க சங்கிலி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தத் தங்கச் சங்கிலியுடன் கேக் வெட்டி வெற்றியைக் கொண்டாடி மகிழும் ஹைதராபாத் அணி வீரர்களின் புகைப்படம்/வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யாக்கர் வீசுவதில் சிறப்பாகச் செயல்படும் இவர் வரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்  என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க : செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!


Spread the love
Exit mobile version