Dowry cruel : உத்திரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு கணவரின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில்,
உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மாமனார் – மாமியாரை உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் அன்ஷு கேசர்வானி. இவருக்கு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் அன்ஷிகா என்ற 21 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பிறகு அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வரதட்சணை கேட்டு அன்ஷிகாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : “இதுக்குத்தாங்க பாமகவோட கூட்டணி..!” – அண்ணாமலை சொன்ன ‘அடடே’ காரணம்!
மேலும், கணவர் அன்ஷு உன் பெற்றோரிடம் சென்று நாங்கள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்தால் தான் உனக்கு என்னுடன் வாழ்க்கை. இல்லையெனில் நீ வாழாவெட்டியாக தான் இருக்க வேண்டும் என்று மிரட்டி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அவர்களின் கொடுமை தாங்காமல், கணவர் கூறியதை நினைத்து மன உளைச்சலில் இருந்த அன்ஷிகா நேற்று இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதையடுத்து இந்த தகவல் அன்ஷிகாவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், கதறி துடித்த அன்ஷிகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அன்ஷிகாவின் வீட்டிற்குச் பதறி அடித்துக்கொண்டு சென்று பார்த்துள்ளனர்.
அங்கு தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டு சடலமாக கிடப்பதை பார்த்த அவர்கள் அன்ஷு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்ட நிலையில், உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அன்ஷுவின் வீட்டைப் பூட்டி தீ வைத்துள்ளனர்.
இதனால், வீட்டிற்குள் இருந்த அன்ஷுவின் தாய் ஷோபா தேவி(62) மற்றும் தந்தை ராஜேந்திர கேசர்வானி(64) ஆகிய 2 பேரும் தீயில் கருகி பலியாகி உள்ளனர்.
இதனிடையே இந்த தகவல் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்து சேர்ந்த காவல் துறையினர், தீப்பற்றி எரிந்த வீட்டிற்குள் இருந்து 5 பேரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : ”பாஜக கூட்டணிக்கு செல்ல பாமகவிற்கு நிர்பந்தம்..”அதிமுக முன்னாள்அமைச்சர் பரபர
உயிரிழந்த அன்ஷிகாவின் மாமனார் மற்றும் மாமியார் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சணைக் கொடுமையால் (Dowry cruel) பெண் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், ஒரு குடும்பமே தீயில் கருகிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.