திருச்சி பேருந்து நிலையத்தில் பெண்களை கிண்டல் செய்த வழக்கில் கைதான இளைஞரை தாக்கியதாக, பெண் தலைமைக் காவலர் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளாது.
திருச்சி பேருந்து நிலையத்தில் பெண்களை கிண்டல் செய்த பிரபு என்பவர் கைதாகி பின்னர் பிணையில் வெளியே வந்த பிறகு, தன்னை கைது செய்த பெண் காவலர் ஹேமலதா உள்ளிட்ட போலீசார் தாக்கியதாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து கதறியுள்ளார்.
Also Read : உலக செஸ் சாம்பியனை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்..!!
பிரபுவின் புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், ஹேமலதா, பிரபுவுக்கு ₹30,000 இழப்பீடு வழங்க உத்தரவிட, இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஹேமலதா முறையீடு செய்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உள்நோக்கத்தோடு ஹேமலதா செயல்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை எனக்கூறி, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.