திருச்சி அருகே வெளியூரில் இருந்து கீ செயின் வியாபாரம் செய்ய வந்த செய்ய வியாபாரியை தாக்கிய வாலிபர்களுக்கு காவல்துறையினர் வலைவீச்சு.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த மகுடேஸ்வரன். இவர் தமிழக முழுவதும் திருவிழா நடக்க இடங்களில் கீ செயின் கடை வைத்து வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள கோட்டப்பாளையத்தில் புனித மரியாள் தேவாலயத்தில் தேர்திருவிழா நடைபெறுகிறத்தை அறிந்த மகுடேஸ்வரன் வழக்கம் போல அங்கு கீசெயின் விற்பனை செய்யும் கடை அமைத்தார்.
சில நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் வியாபாரித்த முடித்துவிட்டு கடையை எடுத்து கிளம்பும்போது கோட்டப்பாளையம் அருகில் உள்ள அக்ரா அக்ராரம் என்றும் கிராமத்தை சேர்ந்த சில வாலிபர்கள் அவர்களிடம் எத்தனை நாட்கள் கடை வைத்தீர்களே இலவசமாக கீச்செயின் தாருங்கள் என்று சொல்லி அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு மகேஸ்வரன் கொடுக்க மறுக்கவே அவரிடம் தகராறு செய்துள்ளனர். அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் காயமடைந்த மகுடேஸ்வரன் மற்றும் அவருடன் உடன் வந்த அவளுக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகுடேஸ்வரன் மற்றும் அவரோடு இருந்தவர்களை தாக்கிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.