சென்னையில் தன்னை காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு நண்பருடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்த ஒருதலை காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை யானைகவுனி பகுதியில் காதலிக்க வற்புறுத்தி 19 வயது இளம்பெண்ணின் மீது அர்ஜுன் (20) என்ற வாலிபர் பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
Also Read : உலகின் மிக வயதான ஒலிம்பிக் சாம்பியனான ஆக்னஸ் காலமானார்..!!
ஒரே பகுதியை சேர்ந்த அர்ஜுன் அந்த இளம்பெண்ணுக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்து வந்த நிலையில் திடிரென பெட்ரோல் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்தால் பயந்துபோன அந்த பெண் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் அர்ஜுனை மற்றும் சம்பவத்தின் போது அர்ஜுனுடன் இருந்த ஜேம்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களின் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இருவர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.