பெங்களூருல் உள்ள நெரிசல் மிகு சாலையில் பைக்குடன் ரீல்ஸ் செய்த இளசுகளின் இரு சக்கர வாகனத்தை பொதுமக்கள் ஒன்றுகூடி பறக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் உள்ள மிக பெரிய தொழில் நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் நெரிசல் மிகுந்த சாலையில் அஜாக்கிரதையாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை ஓட்டி இளைஞர்கள் சில ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.
Also Read : இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் – ஒரே நாளில் குடும்பத்தில் 4 பேரை பறிகொடுத்த நபர்..!!
நேரம் ஆக ஆக போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் ஆத்திரமடைந்த மக்கள், இளைஞர்களின் பைக்குகளை மடக்கிப் பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் அதிகரித்து அதிகளவில் மக்கள் கூடி இளைஞர்களுக்கு எதிராக பேசியதால், ஆத்திரத்தில் இளைஞர்களின் பைக்குகளை 30 அடி உயர பாலத்தில் இருந்து கீழே வீசினர். ஸ்டண்டில் ஈடுபட்ட இளைஞர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்த 44 இளைஞர்களை கைது செய்த போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.