பிரபல youtuber இர்ஃபான் கார் மோதி பெண் பலி!

பிரபல யூடியூபர் இர்ஃபானின் பென்ஸ் கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல ரெஸ்டாரண்ட்களில் உணவுகளை சாப்பிட்டு ரிவியூ செய்து பிரபலமானவர் இர்ஃபான்.இவர் சாப்பிடும் உணவுகளுக்கு ரிவ்யு செய்யும் விதத்தை பலரையும் ஈர்த்தது.

IRFAN views என்ற youtube சேனலை நடத்தி வரும் இவருக்கு சுமார் 4M subscribers உள்ளனர்.மேலும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கு சென்று என்ன உணவு கிடைக்கும் என்ற தகவல்களையும் வழங்கிவருகிறார்.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே பத்மாவதி என்ற 55 வயது பெண்மணி பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மறைமலைநகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது விலை உயர்ந்த Benz கார் வேகமாக வந்து பத்மாவதி மீது மோதியது.

இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதி வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த அசாருதீன் (34) மீது வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை காவல் நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் அது பிரபல யூடியூபர் இர்பானின் கார் என்பதும், இர்பானின் கார் ஓட்டுநர் அசாரூதின் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

Total
0
Shares
Related Posts