Site icon ITamilTv

ஜிஎஸ்எல்வி எஃப்-10 மூலம் சென்ற செயற்கைக்கோள் தோல்வி

Spread the love

புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிக்காக இஓஎஸ்-03 என்ற என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது.

இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் நடைபெற்று வந்தன. இதற்கான 26 மணி நேர கவுண்ட்டவுன் புதன்கிழமை அதிகாலை 3.43 மணிக்கு தொடங்கியது.

26 மணி நேர கவுண்ட்டவுன் நிறைவடைந்ததும், 2வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து (வியாழக்கிழமை) இன்று அதிகாலை 5.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.பி. எப்.10 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வி அடைந்துள்ளதகாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version