Site icon ITamilTv

காலை உணவுத் திட்டம்- அன்பில் சொன்ன குட் நியூஸ்

காலை உணவுத் திட்டம்

காலை உணவுத் திட்டம்

Spread the love

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த காலை உணவுத் திட்டம் 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு முதற்கட்டமாக தொடங்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நாள்தோறும் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ், ரவா கேசரி, பொங்கல், உப்புமா, ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த திட்டத்தை, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கூறிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “காலை உணவுத் திட்டத்தை பொறுத்தவரையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழக முதல்வர் திட்டமிட்டு வருகிறார்.

இதையும் படியுங்க : https://itamiltv.com/pm-modi-prime-minister-modi-will-visit-tamil-nadu-tomorrow-on-a-3-day-visit/

அதற்கான சாதகமான அறிவிப்பு நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் வரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version