ITamilTv

தென் மாவட்டங்கள் : இன்று மழைக்கு வாய்ப்பு..!

தென் மாவட்டங்கள் : இன்று மழைக்கு வாய்ப்பு

Spread the love

தென் மாவட்டங்கள் : தமிழகத்தில் இன்று (18.01.2024) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்,

டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..

“தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்றும், நாளையும் (18.01.2024 – 19.01.2024) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க : https://itamiltv.com/deadly-virus-research-on-a-deadly-virus-that-can-kill-100-of-humans-what-is-chinas-plan-world-news-viral-vedio/

வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

வரும் (20.01.2024) சனிக்கிழமை அன்று தென்தமிழக மாவட்டங்களில் (தென் மாவட்டங்கள்) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தென் மாவட்டங்கள்
தென் மாவட்டங்கள்

மேலும், இன்றும், நாளையும் (18.01.2024 – 19.01.2024) தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு நேரங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1747849018481463322?s=20

முன்னெச்சரிக்கை அறிவிப்பு :

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

18.01.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இருப்பினும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version