பாஜகவில் இணைந்த விஜயதாரணி : எம்எல்ஏ பதவி செல்லாது என அறிவிக்க கோரிக்கை..
பாஜகவில் இணைந்த விஜயதாரணியின் எம்எல்ஏ பதவி செல்லாது என அறிவிக்க கோரிக்கை விடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பி விட்டோம் என தமிழக காங். தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக காங். தலைவர் செல்வபெருந்தகை அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது..
பாஜகவில் இணைந்த விஜயதாரணி : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. எஸ். விஜயதரணி அவர்கள்,
இன்று (24.2.2024) புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு அனுப்பி உள்ளார்.
இதையும் படிங்க : EB Complaints : EB தொடர்பான புகார்களை வீட்டில் இருந்தே தெரிவிக்க மின்சார வாரியம் மொபைல் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால்,
அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் திருமதி. எஸ். விஜயதரணி அவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு,
இதையும் படிங்க : நடிகர் ரஜினிகாந்திற்கு சிலை.. அன்னதானம் வழங்கி அபிஷேக பூஜை நடத்தி வரும் ரசிகர்!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.