பிராமணர் சங்கம் -வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அனைத்துக் கட்சிகளிலும் பிராமண சமூக வேட்பாளர்கள் மூவர் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என பிராமணர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை அசோக் நகரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அனைத்து பிராமணர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பு இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அகில பாரதீய ப்ராஹ்மண மஹாசங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நடுவை திரு.வெ. பிரேம்சாகர் தலைமையில் நடைபெற்றது.
அதில் மாவட்ட மகளிரணி செயலாளர், மாவட்ட பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிராமண சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ,இந்த கூட்டத்திற்கு பிறகு பாரதீய ப்ராஹ்மண மஹாசங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நடுவை திரு.வெ. பிரேம்சாகர் ஒருங்கிணைப்பில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உயர் திரு. டாக்டர். பாரிவேந்தரை சந்தித்து பேசினார்.
இதையும் படிங்க :https://itamiltv.com/vanathi-said-jallikattu-is-part-of-sanatana-dharma/
இந்த சந்திப்பின் போது பிராமணர்களின் முக்கிய கோரிக்கைகள் இவை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை பின்வருமாறு:
தேசிய மற்றும் மாநில பிராமணர் நல வாரியம் ஒன்னாம் தேதி மத்திய மற்றும் மாநில அரசுகளால் அமைக்கப்பட வேண்டும்.
EWS பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் அமுல்படுத்தப்படுதல்,
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்டவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டினை, தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும்.
ஹிந்து சமய அறநிலையத்துறை ஆலயங்களில் நீதிமன்ற ஆலோசனையின் அடிப்படையில் தக்கார் நியமனத்தில் பிராமணர் சமூகத்தில் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதையும் படிங்க :https://x.com/ITamilTVNews/status/1747881163652472867?s=20
வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் அனைத்துக் கட்சிகளிலும் பிராமண சமூக வேட்பாளர்கள் மூவர் போட்டியிட வாய்ப்பு போன்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தங்களது கோரிக்கைகளாக முன்வைத்தனர்.
பின்னர் அவர்களது கோரிக்கையை கேட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உயர் திரு. டாக்டர். பாரிவேந்தர் ஐஜேகே கட்சி சார்பில் உறுதி அளித்தார்.
இதனையடுத்து இந்த சந்திப்பு குறித்துபிராமணர் சங்கம் அகில பாரதீய ப்ராஹ்மண மஹாசங் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நடுவை திரு.வெ. பிரேம்சாகர் கூறுகையில்,
டாக்டர். பாரிவேந்தர் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் ஐஜேகே கட்சி சார்பில் எங்களுக்கு சலுகைகள் வழங்கிட உறுதுணையாக இருப்பதாக கூறினார்.