Tamilnadu

வேட்புமனு தாக்கல் செய்த சுந்தர் சி – கோடிகளில் சொத்து விவரம் வெளியீடு!

மதுரை மத்திய தொகுதியில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் இடம்பெறும் புதிய நீதி கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர் சி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதனுடன், அவரது சொத்து விவரங்களும் பொதுமக்கள் கவனத்திற்கு வந்துள்ளனதமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாக இருப்பதால், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சிக்கு மதுரை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதில், மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அவரது மனைவியும் பாஜக நிர்வாகியுமான குஷ்பூ உடன் இருந்தார்.

அவரது பிரமாணப் பத்திரத்தின் படி, சுந்தர் சிக்கு கோடிக்கணக்கில் அசையும் மற்றும் நிலச் சொத்துகள் உள்ளன.

அதேபோல், குஷ்பூவுக்கும் குறிப்பிடத்தக்க சொத்துகள், நகைகள் மற்றும் வாகனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் சில கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களும் உள்ளன.

இந்த தொகுதியில் தற்போதைய அமைச்சரான பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து சுந்தர் சி போட்டியிடுவது தேர்தல் பரபரப்பை அதிகரித்துள்ளது.

2021 தேர்தலில் திமுக வென்ற இந்த தொகுதியில், இம்முறை கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *