Site icon ITamilTv

12ம் வகுப்பு பொதுத் தேர்வு – திடீர் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்..!!

Kovai Collector

Kovai Collector

Spread the love

Kovai Collector : தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொது தேர்வுகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் கோவையில் உள்ள பள்ளிகளில் அம்மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கோவை மாவட்டத்தை பொருத்தவரை 127 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 33,659 மாணவ மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 300 பேர் கொண்ட பறக்கும் படைகள் தீவரை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சித்தாப்புதூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார் .

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கிராந்திகுமார் பாடி கூறியதாவது :

கோவை மாவட்டத்தில் 363 பள்ளிகளில் 127 மையங்களில் பொது தேர்வு நடைபெறுவதாகவும், இதில் 15,847 மாணவர்கள், 18,412 மாணவிகளும் தேர்வு எழுதுவதாக தெரிவித்தார்.

Also Read : https://itamiltv.com/12th-public-exam-starts-today-eps-all-the-best-to-students/

மன அழுத்தம் இன்றி மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டும் என்று அமைச்சர் கூறியதையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளர் மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய மாவட்ட ஆட்சியர் . கோவை மாவட்டத்தில் (Kovai Collector) அனைத்து தேர்வு மையங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version