தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (21.11.2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
நவம்பர் மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிககனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நவ.25 முதல் பருவமழை வலுவடையும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.